Skip to main content

நாட்டு மாடு வளர்க்க ஆசையா.. எங்கு கிடைக்கும்…

நாட்டு மாடு வளர்க்க ஆசையா.. எங்கு கிடைக்கும்… வாட்ஸ் ஆப்பில் வலம் வரும் லிஸ்ட்!எந்த நாளில் எங்கு சென்றால் நாட்டு பசுவை வாங்கலாம் என்ற தகவல் வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டு வருகிறது. தேவைப்படுபவர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள் நண்பர்களே என்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்களுக்கான வாட்ஸ் அப்பில் சுற்றி வரும் செய்தி இது.


  • ஆண்டு தோறும் பிப்ரவரி 11 முதல் 22ம் தேதி வரை கோயமுத்தூர் மேட்டுப்பாளையம் காரமடை சந்தை
  • திங்கள் தோறும் கோயமுத்தூர் பல்லடம் சந்தை
  • வியாழன் தோறும் கோயமுத்தூர் பொள்ளாச்சி சந்தை
  • சனி தோறும் திருப்பூர் பெரமநல்லூர் சந்தை
  • சனி தோறும் திருப்பூர் மங்கலம் சந்தை
  • வெள்ளி தோறும் உடுமலைபேட்டை பூலவாடி சந்தை 
  • திங்கள் தோறும் உடுமலைபேட்டை சந்தை 
  • வியாழன் தோறும் சின்னசேலம் சந்தை 
  • ஞாயிறு தோறும் கடலூர் குள்ளஞ்சவாடி சந்தை 
  • ஞாயிறு கடலூர் மூங்கில்துரைப்பட்டு 
  • சனி தோறும் கடலூர் தியாகதுர்கம் 
  • புதன் தோறும் சிதம்பரம் சேத்தியாதோப்பு சந்தை 
  • புதன் தோறும் சிதம்பரம் புவனகிரி சந்தை 
  • திங்கள் தோறும் கடலூர் காரமணிக்குப்பம் சந்தை 
  • செவ்வாய் தோறும் காட்டுமன்னார்கோவில் லால்பேட்டை சந்தை 
  • புதன் தோறும் கடலூர் திட்டகுடி சந்தை 
  • வெள்ளி தோறும் விருதாச்சலம் வேப்பூர் சந்தை 
  • வியாழன் தோறும் விருதாச்சலம் சந்தை 
  • செவ்வாய் தோறும் விருதாச்சலம் அத்தியூர் சந்தை 
  • திங்கள் தோறும் தர்மபுரி பல்லாபள்ளி சந்தை 
  • ஆண்டு தோறும் பிப்ரவரி 23 முதல் 25ம் தேதி வரை தர்மபுரி குடிச்செட்லு சந்தை
  • ஞாயிறு தோறும் தர்மபுரி தேன்கனிக்கோட்டை கீழமங்கலம் சந்தை 
  • ஆண்டு தோறும் பிப்ரவரி 18 முதல் 20ம் தேதி வரை தர்மபுரி தேன்கனிக்கோட்டை மடகொண்டபள்ளி சந்தை
  • செவ்வாய் தோறும் தர்மபுரி நல்லாம்பள்ளி சந்தை
  • புதன் தோறும் தர்மபுரி அரூர் கோபிநாத்தம்பட்டி சந்தை 
  • வெள்ளி தோறும் தர்மபுரி அரூர் கம்பியநல்லூர் சந்தை 
  • வியாழன் தோறும் தர்மபுரி ஒசூர் பாகலூர் சந்தை 
  • புதன் தோறும் தர்மபுரி ஒசூர் சந்தை 
  • ஆண்டு தோறும் பிப்ரவரி முதல் மார்ச் தர்மபுரி ஒசூர் சப்பரப்பள்ளி சந்தை 
  • புதன் தோறும் தர்மபுரி கிருஷ்ணகிரி ஒரப்பம் சந்தை
விவரங்கள் மேலும் தொடரும் !!! தொடர்பில் இருங்கள் நண்பர்களே !!!

Comments